பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசன...
Ravi Mohan: "ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு" - மெமரீஸ் பகிரும் கார்த்தி!
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார்.
'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது.

'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, "தயாரிப்பாளராக அவர் அறிமுகமாகிறார்னு தெரிந்ததும் நண்பனாக நான் அவரைத் தொடர்புகொண்டு அனைத்தையும் விசாரிச்சேன். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.
அவருடைய திறன் எனக்குத் தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதை இவ்வளவு பெரிய நிகழ்வாக இதுவரை யாரும் பண்ணினது கிடையாது. அவருக்கு இந்தத் தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமானதாக அமையணும்.
நான் சினிமாவுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்ட சமயத்துல ரவி அண்ணா ஸ்டன்ட் கிளாஸ்ல இருப்பாரு.
நாங்க 3 அடி ஜம்ப் பண்ணினால், அவர் உயரமான லெவலுக்கு ஜம்ப் செய்வாரு. அப்போ, இவர்கள் இருக்கிற சினிமாவுக்குத்தான் வரப்போறோம்னு கொஞ்சம் பயமா இருந்தது.
அப்போ ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு. நாங்க ஜூஸுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டாரு. பிறகுதான் அவர் என்னைவிட சின்ன பையன்னு தெரியவந்தது.

அப்போதான் அண்ணன் ரவியாக மாறினார். யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்தான் ரவி. அவராலயும் அப்படி நினைக்க முடியாது. ரவிக்கு சினிமா பற்றி ஆழமாக அத்தனை விஷயங்களும் தெரியும்.
படிக்கவே இல்லனு சொல்லிட்டு நல்ல மதிப்பெண்கள் வாங்குபவர்களை மாதிரிதான் ரவியும் இருப்பான்." என்றார்.
கார்த்தி பேசியது தொடர்பாக ரவி மோகன், "நானும் கார்த்தியும் பெரிதளவுல ஆடம்பரத்தை விரும்பாத நபர்கள். நாங்க இருவரும் சேர்ந்து தாய்லாந்துல வாக்கிங் போகும்போது 'நீங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பியா'னு கேட்டிருக்காங்க. அப்படியான அன்போட கார்த்திகூட வாழ்க்கை முழுவதும் ட்ராவல் செய்யணும்னு ஆசை இருக்கு." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...