தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
Saif Ali Khan : 5 மணிஆபரேசனில் கத்திமுனை அகற்றம் - திருடன் வீட்டிற்குள் நுழைந்தது எப்படி?
சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து
மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நேற்று அதிகாலை புகுந்த மர்ம நபர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தி காயப்படுத்தினான். சைஃப் அலிகான் உடம்பில் 6 இடத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது. அதிகாலையில் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்து அந்த நபர் தாக்கிய சம்பவம் பாலிவுட் பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சைஃப் அலிகான் அவசர அவசரமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேசன் செய்தனர். அவரது முதுகெழும்பு அருகில் ஆழமான கத்திக்குத்துக்காயம் இருந்தது. அந்த காயத்தில் ஆபரேசன் செய்தபோது கத்தியின் முனை உள்ளே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. கை மற்றும் கழுத்து பகுதியிலும் ஆழமான காயங்கள் இருந்தது. சைஃப் அலிகானுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது கத்தியின் முனை இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து டாக்டர் நிதின் கூறுகையில், 'முதுகெழும்பு பகுதியில் இருந்த கத்தி முனை கூடுதலாக ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு உள்ளே சென்று இருந்தாலும் மிகப்பெரிய பிரச்னையாகி இருக்கும். முதுகு தண்டுப்பகுதியில் மட்டும் 2.30 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தவிர மற்ற காயங்களை சரி செய்ய மொத்தம் 5 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. துரதிஷ்டவசமாக காயங்கள் மிகவும் ஆழமாக இருந்தது'' என்றார். சைஃப் அலிகான் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருடன் வீட்டிற்குள் நுழைந்தது எப்படி?
நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் திருடன் எப்படி நுழைந்தான் என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ''திருடன் பக்கத்து கட்டட சுவர் வழியாக சைஃப் அலிகான் வசிக்கும் சத்குரு சரண் கட்டடத்திற்குள் நுழைந்திருக்கவேண்டும். அங்கிருந்து குழாய் மூலம் திருடன் சைஃப் அலி கான் வசிக்கும் 11வது மாடியை அடைந்திருக்கவேண்டும். சைஃப் அலிகான் வீட்டு பாத்ரூம் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்றிருக்கவேண்டும் என்று கருதுகிறோம்'' என்றார். மேல் புறம் இருக்கும் 4 மாடிகளும் சைஃப் அலிகானுக்கு சொந்தமானது தான். அதனை இணைத்து வசித்து வருகிறார் அவர்.
30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்ததை சைஃப் அலிகான் வீட்டு வேலைக்கார பெண் எலியம்மா தான் முதலில் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் அதிகாலை 2 மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு நான் எழுந்தேன். அந்நேரம் பாத்ரூம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உடனே கரீனா கபூர் தான் உள்ளே சென்று இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் சத்தம் வந்ததால் நான் மீண்டும் எழும்பினேன். அந்நேரம் பாத்ரூம்பில் இருந்து ஒருவர் வெளியில் வந்தார். அவர் தொப்பி அணிந்திருந்தார். அந்த நபர் கரீனா கபூரின் இரண்டாவது மகன் அறைக்குள் நுழைய முயன்றார். உடனே நான் தடுத்தேன். என்னிடம் அமைதியாக இருக்கும்படி கூறி என்னிடம் ஒரு கோடி கொடுக்கும்படி கேட்டு கத்தியால் என்னை குத்தினான்.
எனது சத்தத்தை கேட்டு என்னுடன் வேலை செய்யும் ஜுனுவும் ஓடி வந்தார். ஜுனு சத்தம் போட்டு கத்தியதால் தூங்கிக்கொண்டிருந்த சைஃப் அலிகான் எழுந்து வந்து திருடனை மடக்கிப்பிடிக்க முயன்றார். எங்களுடன் மற்றொரு வீட்டு வேலைக்கார ஆணும் சேர்ந்துகொண்டார். ஆனால் சைஃப் அலிகானை திருட வந்தவன் கத்தியால் பல முறை குத்திவிட்டான்''என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் தீக்ஷித் கூறுகையில், ''திருடன் வீட்டிற்குள் எப்படி வந்தான் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் எதையும் உடைத்துக்கொண்டு அல்லது பூட்டை திறந்து கொண்டு வரவில்லை. படிக்கட்டு வழியாக வெளியில் தப்பிச்செல்வது மட்டும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. திருடனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது''என்று தெரிவித்தார். திருட வந்தவன் தாக்கியதில் சைஃப் அலிகான் தவிர 2 பேர் காயம் அடைந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs