Sanju: "சஞ்சுவை விட பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை; ஆனால்..." - சஞ்சு தேர்வாகாதது குறித்து கவாஸ்கர்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அதில் ஒன்று கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் சொதப்பிய இந்திய பேட்மேன்ஸ்களில் ஒருவரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றிருப்பது. இதில், சஞ்சு சாம்சனை எடுக்காமல் பண்ட்டை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வியெழுவதற்குக் காரணம், சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரில் ஒரு சதமும், கடைசியாக விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில் 3 சதமும் அடித்திருக்கிறார்.
ஆனால், கார் விபத்துக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தொடங்கியது முதல் பண்ட் ஒயிட் பால் போட்டிகளில் எந்தப் போட்டியிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதனால்தான், சஞ்சு சாம்சன் ஏன் இல்லை, எதனடிப்படையில் பண்ட் என்ற விவாதம் வெடித்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், எதற்காக சஞ்சு சாம்சனை விட பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தனது பார்வையில் விளக்கியிருக்கிறார்.
Sportstak ஊடகத்திடம் விளக்கிய சுனில் கவாஸ்கர், ``அவரை (சாம்சன்) நீக்க எந்த காரணமும் இல்லை. ஆனால், பண்ட் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர் என்று நாம் அனைவரும் அறிவோம். மேலும், பண்ட் இடதுகை ஆட்டக்காரராக இருப்பது அவருக்கு ப்ளஸ். அதோடு, சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. ஆனால், சஞ்சு சாம்சனை விட சிறந்த பேட்ஸ்மேனாக பண்ட் இருக்க முடியாது.
ஆனால், சஞ்சு சாம்சனை விட பண்ட்டால் ஆட்டத்தை போக்கை மாற்ற முடியும். அதனால்தான் சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை. இருப்பினும், சஞ்சு சாம்சன் இதற்கு வருத்தப்படக்கூடாது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் சஞ்சு சாம்சன் மீது அவர் செய்த சாதனையால் அனுதாபம் கொண்டிருக்கிறார்கள்." என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது மற்றும் பண்ட் சேர்க்கப்பட்டது குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...