திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Sanju Samson: 'நடந்தால் பார்ப்போம்' - சிஎஸ்கேவில் இணைகிறீர்களா? சஞ்சு சாம்சன் அளித்த பதில் என்ன?
சிஎஸ்கே அணியில் இணைவது தொடர்பாக சஞ்சு சாம்சன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்திருக்கிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார்.

சமீபத்தில் இவர் சிஎஸ்கே அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அஷ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் "நான் கேரளவுக்கு வந்திருக்கிறேன். நீ தமிழ்நாட்டுக்கு வருகிறாரா?" என சிஎஸ்கேவிற்கு சஞ்சு சாம்சன் மாறுவது தொடர்பாக சூசகமாக அஷ்வின் கேட்டார்.
நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்த சாம்சன், " கேரளாவில் ஐபிஎல் இல்லை அண்ணா, நான் தமிழ்நாட்டிற்கு வருவதெல்லாம் என் கையில் இல்லை. நடந்தால் பார்ப்போம்" என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இருந்து சாம்சன் சென்னை அணிக்கு டிரேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது