செய்திகள் :

Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ராமசாமி சொல்வதென்ன?

post image

இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சீனு ராமசாமி - ஜி.எஸ்.தர்ஷனா தம்பதியின்17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இதுகுறித்த அவரது பதிவில், "அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்." என எழுதியுள்ளார்.

Seenu Ramasamy

மேலும் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியிருப்பதையும் தெரிவித்துள்ளார். "இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம்." என்று தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி தேசிய விருது பெற்ற இயக்குநர். இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளராக பணியாற்றிய இவர், 'கூடல் நகர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக உருவானார். அதே 2007ம் ஆண்டில் அவருக்கு திருமணமும் நடைபெற்றுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை உள்பட பல படங்களை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

இவரது எழுத்தில் `புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை', `காற்றால் நடந்தேன்', `மாசி வீதியின் கல் சந்துகள்', 'கோயில் யானையின் சிறுவன்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

சீனு ராம்சாமி - தர்ஷனா தம்பதிக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Madha Gaja Raja: "அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து" - விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என பல ஸ்டார் காஸ்ட்டுடன் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டத் திரைப்படம் `மதகஜராஜா'.ஜ... மேலும் பார்க்க

``அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B', `உள்ளம் கேட்குமே', `உன்னாலே உன்னாலே', போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா.அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ... மேலும் பார்க்க

Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி..." - ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷின் 'நேசிப்பாயா' படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உர... மேலும் பார்க்க