செய்திகள் :

Serial Update : `விஷ்ணு பத்தி நான் செளந்தர்யாவுக்கு சொல்லணும்னு அவசியமில்ல; ஏன்னா..!'- ஆயிஷா ஷேரிங்

post image

அறிவிப்பு விரைவிலேயே வரும்!

ஜீ தமிழில் ஒளிபரப்பான `கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் அர்த்திகா. அந்தத் தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது அர்த்திகா சன்டிவியில் புதியதாக வரவிருக்கும் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அர்த்திகா

அர்த்திகாவுடன் இணைந்து நடிகர் கிருஷ்ணாவும் இந்தத் தொடரில் நடிக்கிறார். `தாலாட்டு' தொடருக்குப் பிறகு கிருஷ்ணா இந்தத் தொடரில் நடிக்க இருக்க இருக்கிறார். இவர்களுடன் குழந்தை நட்சத்திரமான ரியோ மனோஜூம் நடிக்கிறாராம். இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவிலேயே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி மீனாவுக்கு பதில் ரம்பா..!

`ஜோடி ஆர் யூ ரெடி' சீசன் 2 விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சாண்டியும், நடிகை ஶ்ரீதேவி விஜயகுமாரும், நடிகை மீனாவும் நடுவர்களாக இருந்தனர். 

ரம்பா

இந்த இரண்டாவது சீசனில் நடிகை மீனா கலந்து கொள்ளவில்லை. ஜோடி ஆர் யூ ரெடி இரண்டாவது சீசனுக்கான அதிகாரப்பூர்வமான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் சாண்டி மாஸ்டரும், ஶ்ரீதேவி விஜயகுமாரும் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், மீனாவிற்கு பதிலாக நடிகை ரம்பா நடுவராக களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

`நான் அவளுக்கு சொல்லணும்னு அவசியமே இல்ல!’

`உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் தற்போது நிறைவடைந்திருக்கிறது. அந்த சீரிஸில் நடித்திருந்த நடிகர்களை விகடன் யூடியூப் சேனலுக்காக பேட்டி எடுத்திருந்தோம். அப்போது ஆயிஷாவிடம் விஷ்ணுவுடனான நட்பு குறித்தும், செளந்தர்யா அவரிடம் காதலை சொன்னது குறித்தும் கேட்டோம். அதற்கு ஆயிஷா,

விஷ்ணு - ஆயிஷா

" நம்ம வாழ்க்கையை பிரைவேட் ஆக வச்சிக்கிறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். நானும் விஷ்ணுவும் நண்பர்களாகத்தான் இருக்கோம். தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட் ஆக வச்சிக்கிறது ரொம்ப பெட்டர். செளந்தர்யா வெளியில் வரட்டும் நாங்க அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். அவளுக்கு விஷ்ணு பத்தி முழுசா தெரியும்.

`சத்யா' நாலு வருஷம் நடிச்சப்ப எனக்கு விஷ்ணு பற்றி எல்லாமே தெரியும். அவரோட ஒரு அசைவை கூட சரியா கணிச்சிடுவேன். இப்ப அவன் இது பண்ணிடுவான் பாருங்கிற அளவுக்கு எனக்குத் தெரியும். அதே மாதிரி எனக்கு அடுத்து விஷ்ணுவுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆக வந்தவங்க தான் செளந்தர்யா. எனக்கு அடுத்த ஸ்டேஜூக்கே செளந்தர்யா வந்துட்டாங்க. அவங்களுக்கு விஷ்ணு பற்றி எல்லாமே தெரியும். நான் அவளுக்கு சொல்லணும்னு அவசியமே இல்ல!" எனக் கூறியிருந்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BB Tamil 8: "சாச்சனாவுக்கு ஏன் தைரியம் இல்ல..." - ரயான், சாச்சனா மோதல்; என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96 வது நாளுக்கான (ஜனவரி 10) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8: ரொம்ப ஓவரா பண்றீங்க, நீங்க பண்றத நான் இங்க சொல்லட்டா? - தீபக்கை சாடிய வர்ஷினி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 95: `வந்தாச்சு எண்டு' இறங்கி அடித்த சுனிதா - கலங்கி அழுத சவுந்தர்யா

புதிதாக வந்தவர்களில் ரவியைத் தவிர வேறு எவரும் எதையும் செய்யவில்லை. ‘கண்ணில் விரலை விட்டு ஆட்டுவேன்’ என்று சபதம் போட்ட அர்னவ், கடந்த முறை மாதிரியே ‘அட்மாஸ்பியர் ஆர்டிட்ஸ்ட்’ போல அங்குமிங்கும் உலவிக் கொ... மேலும் பார்க்க

BB Tamil 8: கூத்துப்பட்டறை பயிற்சி முதல் உளவியல் ஆலோசகர் வரை - சாஷோ ‘பிக் பாஸ்’ ஆன கதை

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண், ஜாக்குலின் உள்ளிட்ட 8 பேர் இப்போது களத்தில் இருக்கிறார்கள். யாருக்கு டைட்டில் ... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நான் பண்ணின தப்பு ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டதுதான்" - ஜாக்குலின் சௌந்தர்யா விரிசல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் ப... மேலும் பார்க்க

BB Tamil 8: `Manipulate-னா என்னானு இவங்களாலதான்...' குற்றச்சாட்டும் சுனிதா - கதறி அழும் சவுந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந... மேலும் பார்க்க