கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
Summer: கறுப்பு நிற ஆடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? | சம்மர் டிப்ஸ்!
கோடைகாலம் வந்தவுடன் நம்முடைய இயல்பு வாழ்க்கையின் அன்றாட விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, நீர் ஆதாரங்களை எடுத்துக் கொள்வதுடன், சன் ஸ்கிரீன் போன்ற ஸ்கின் கேர் விஷயங்களையும் பின்பற்ற வேண்டியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆடைகளில் சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும்.

கோடை காலத்திற்கு ஏற்ப காட்டன் உடைகளை அணிய வேண்டும் என்று கூறுகிறார், தோல் மற்றும் அழகியல் மருத்துவர் கோல்டா.
இதிலும் குறிப்பாக பல வருடங்களாக கேள்விப்பட்டிருக்கும் விஷயம், கறுப்பு உடை அணிந்தால் உடலில் வெப்பம் அதிகம் ஆகும் என்பதுதான். உண்மையில் கறுப்பு உடை அணிந்தால் உடல் வெப்பம் ஆகுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவர் கோல்டா கூற்றுப்படி,
பொதுவாக அனைத்து துணிகளும் உடலால் வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சை ஓரளவு உள்வாங்கிக் கொள்கிறது. இது குளிர்காலத்தில் நம்மை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் வெப்ப நாள்களில் இது உகந்ததாக நமக்கு இல்லை.

பருத்தி, நைலான் போன்ற ஓரளவு காற்று உட்புகும் ஆடை வகைகளை அணிவது அவசியம். இவை வியர்வை மற்றும் வெப்பத்தை வெளியேற்ற அனுமதிக்கின்றன.
நிறம் என்று எடுத்துக் கொண்டால், பெரும்பாலான மக்கள் கோடையில் வெள்ளை நிற ஆடைகளை அணிவார்கள் ஏனென்றால் வெள்ளை நிறம், கறுப்பு நிறத்தைப்போல ஒளியை உறிஞ்சுவதற்கு பதிலாக அப்படியே பிரதிபலிக்கிறது.
சூரியனிடமிருந்து மட்டுமல்லாது நம் உடலில் இருந்து வரும் வெப்பத்தை வெள்ளை ஆடைகள் அப்படியே திரும்ப பிரதிபலிக்கிறது.
இந்த வெயில் காலத்தில் ஓரளவுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள தளர்வான ஆடைகளையும், வெள்ளை நிற ஆடைகளையும் அணிவது நல்லது. தளர்வான, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வையை வெளியேற்றவும் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும் என்கிறார் மருத்துவர்.