செய்திகள் :

Sundar Pichai: ``பல புதுமையான ஐடியாக்கள் இந்த இடத்தில்தான் தோன்றியது..'' - சுந்தர் பிச்சை

post image

`2025-ல் கூகுள் தேடல்கள் ஆச்சரியப்பட வைக்க்கும்'

'2025-ம் ஆண்டில் கூகுள் தேடல்கள் உங்களை மிகவும் ஆச்சரியப்பட வைக்கப்போகின்றது' என்று கூகுளின் புதிய அப்டேட்டை பற்றியும், பல விஷயங்களை பற்றியும் பேசியிருக்கிறார் அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.

இணைய உலகில் 'கூகுள்' என்பது தவிர்க்க முடியாதது. கடக்க முடியாதது. முன்னர், மைக்ரோசாப்டின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, 'ஏ.ஐ-யில் கூகுள் இயல்பாகவே வெற்றியாளாராக இருந்திருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதுக்குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர் பிச்சையிடம் கேட்கப்பட்டது.

ஏ.ஐ குறித்து சுந்தர் பிச்சை!

பயனாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்

அதற்கு அவர், "ஏ.ஐ என்ற ஆழமான மாற்றத்தின் ஆரம்ப படிகளில் இருக்கிறோம். இன்னும் அதில் பல புதுமைகள் வர உள்ளது. அதனால், அவற்றில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டு கூகுள் எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி பேசும்போது, "2025-ம் ஆண்டு கூகுள் தேடல்களில் பல புதுமைகள் வர உள்ளன. இது பயனாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும்.

கூகுள் இன்னும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற உள்ளது. கூகுளில் வர உள்ள புதுமைகளை 2025-ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களிலேயே காணலாம்" என்று கூறினார்.

கிரியேட்டிவிட்டி உருவாகும் இடம்...

கூகுள் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்கப்பட்டப் போது, "கூகுளின் பல புதுமையான ஐடியாக்கள் நிறுவனத்தின் கேண்டீனில் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது தான் உதித்திருக்கிறது. நான் ஆரம்ப கால கூகுள் பணியின் போது, கேண்டீன், யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, யாரையாவது சந்திக்கும்போது, எதை பற்றியாவது நினைத்து ஆச்சரியப்படும்போது தான் கிரியேட்டிவிட்டி உருவாகி இருக்கிறது" என்று பதில் கூறியுள்ளார்.

``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன?

எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது. உக்ரைன் - ரஷ்ய... மேலும் பார்க்க

CCTV: 'உங்கள் வீட்டிற்கு இலவச சிசிடிவி கேமரா வேண்டுமா... எங்கே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?'

சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறதுதிருட்டு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல், விபத்துகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றத்தை தடுக்க, அல்லது... மேலும் பார்க்க

Chat GPT: இனி வாட்ஸ்ஆப்பிலேயே பயன்படுத்தலாம்; Meta AI உடன் போட்டிப்போடும் Open AI?

ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை முயற்சியாக 1-800-ChatGPT என்ற சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் உங்கள் மெஸ்ஸேஜிங் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இந்த எண்ணை சேவ் செய்து சேட் ஜிடிபியுடன் உரையாடலாம்... மேலும் பார்க்க

Elon Musk: 'G - Mail' க்கு மாற்றாக 'X - Mail' - நெக்ஸ்ட் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்

எலான் மஸ்க் எதையும் விட்டு வைப்பதாக இல்லை. எல்லாத் துறைகளிலும் கால் பதித்து தனது பிஸினஸை விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பிரசாரங்கள் வரை எல்லாவ... மேலும் பார்க்க

அமெரிக்கா: 'AI மீது சட்ட நடவடிக்கை' - குழந்தைகளிடம் Chatbot பேசியது என்ன?

அமெரிக்காவில் டீன் ஏஜ் சிறுவன் பெற்றோரைக் கொலை செய்ய வேண்டுமென மறைமுகமாக கூறியதாக செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலி (Chatbot) மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் கூறுவதன் படி ... மேலும் பார்க்க

ChatGPT down ஆனது ஏன்? அதனிடமே கேள்வி கேட்டதற்கு OpenAI சொன்ன பதில்!

ChatGPT செயலிழப்புஉலகளவில் OpenAI-ன் பிரபலமான சாட்போட் ChatGPT செயலிழப்புப் புகார்களை எதிர்க்கொண்டிருக்கிறது. ChatGPT, API, Sora video generator உள்ளிட்ட OpenAI தளங்கள் பலருக்கு முற்றிலுமாக செயல்படாமல... மேலும் பார்க்க