செய்திகள் :

Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?

post image

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.

நொறுக்கப்பட்ட கண்ணாடி கூண்டு

நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் டோல்கேட் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இன்று காலை டோல்கேட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

இன்று காலை 8 மணிக்கு டோல்கேட் செயல்பாட்டுக்கு வருவதாக டோல்கேட் ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திடீரென டோல்கேட் பகுதியில் ஒன்று திரண்டு கற்கள், கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினர். இதில் டோல்கேட் கண்ணாடி கூண்டுகள், கணினிகள், போன்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

டோல்கேட்டில் திரண்ட மக்கள்

மேலும் டோல்கேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பாக காணப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வத்தலகுண்டு அருகே டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PAK Train Hijack: ``155 பேர் மீட்பு, 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..'' - பாகிஸ்தான் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானால் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் பலூச் விடுதலை படை (Baloch Liberation Army - BLA), தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் ... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிர... மேலும் பார்க்க

வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!

ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆற... மேலும் பார்க்க

பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு... காதல் விவகாரம்தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வ... மேலும் பார்க்க

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க