செய்திகள் :

Tourist Family: `20 வருஷத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம்...' - நடிகை சிம்ரன்

post image

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.

'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி
டூரிஸ்ட் ஃபேமிலி

மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் பேசிய சிம்ரன், "நான் இந்தியாவில் இல்லாதக் காரணத்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். கதை கேட்டப்போதே இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குநர் அபியிடம் சொன்னேன்.

இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்குப் பெருமைப்படுகிறேன். நான் 30 வருடமாக இந்த சினிமாத்துறையில் இருக்கிறேன். ரசிகர்கள் இல்லையென்றால் இந்த வெற்றி அடைவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

சிம்ரன்
சிம்ரன்

சசிகுமார் சார் மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர். நல்ல இயக்குநர் மற்றும் நடிகர். டயலாக் எப்படி பேச வேண்டும். இலங்கை தமிழில் எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.

அவரிடம் இருந்துக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. 20 வருடங்களுக்கு பிறகு இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய படக்குழு அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Tourist Family: "எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.." - இயக்குநர் அபிஷன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் ... மேலும் பார்க்க

Simran: "வந்தது பெண்ணா வானவில் தானா எனப் பார்த்திருப்போம்; ஆனா செட்ல.." - சிம்ரன் குறித்து சசிகுமார்

`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'நன்றி தெரிவிக்கும் விழா' நடைபெற்று வருகிறது.அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், "நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் பெருமை இயக்குநருக்குத்தான் (அப... மேலும் பார்க்க

Tourist Family: "இந்தப் படத்திற்குப் பிறகு என்னுடைய சம்பளம்..." - சசிகுமார் ஓப்பன் டாக்

`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை... மேலும் பார்க்க

"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய பதில்

ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

Sarpatta Parambarai 2: "தொடங்கும் சார்பட்டா 2 ஷூட்டிங்" - ஆர்யா கொடுத்த அப்டேட்

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.Santhanam at DD Next Level Press Meetபடத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்தில் சந்தானம் பளீச்

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘ட... மேலும் பார்க்க