Transformation: `விமர்சனங்களும் புறக்கணிப்புகளும்' - ஓரே போட்டோ மூலம் சர்ஃபராஸ் கொடுத்த சர்ப்ரைஸ்!
இந்தியா கிரிக்கெட் வீரர்களில் கவனம் பெற்றவர்களில் ஒருவர் சர்ஃபராஸ் கான். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், இந்திய அணியில் இடம்பிடித்த போதிலும், தனக்கான அங்கிகாரத்தைப் பெறமுடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஆட்டம் சர்ஃபராஸ் கானுக்கு மட்டுமல்லாமல் இந்திய வீரர்களுக்குமே சிறப்பாக இல்லை. அதன் எதிரொலியாக சர்ஃபராஸ் கானுக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் அவருடைய பெயர்கூட இடம்பெறவில்லை. இதற்கு ஹர்பஜன் சிங், ``இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது... அணியில் அவரது பெயர் இல்லை என்றதும் சற்று அதிர்ச்சியடைந்தேன். அவர் மீண்டும் வலுவாக வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கு மீண்டும் அணியில் இடம்பிடிக்கும் மன உறுதி உள்ளது... நான் சொல்லக்கூடியது என்னவென்றால், சோர்வடையாதீர்கள், இன்று இல்லையென்றால் நாளை உங்களுக்கு உரிய தகுதி கிடைக்கும்... கருண் நாயரைப் பாருங்கள்" என சர்ஃபராஸ் கானுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
மேலும், தொடர்ந்து சர்ஃபராஸ் கானின் உடல் எடை குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், ஒரு சர்ப்ரைஸ் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் சர்ஃபராஸ் கான். தன் உடல் எடையில் சுமார் 17 கிலோ எடையைக் குறைத்து, ஒரு அற்புதமான மாற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.
Dedication. Discipline. Determination. Sarfaraz Khan has shed 17 kgs in just 2 months — a true testament to hard work and focus. #ENGvINDpic.twitter.com/LFiZQUO3iK
— Pitch22 (@OfficialPitch22) July 21, 2025
அந்தப் புகைப்படத்தைப் பார்த்து வியந்த கெவின் பீட்டர்சன், எக்ஸ் தளத்தில், ``மிகச்சிறந்த முயற்சி! மிகப்பெரிய பாராட்டுகள், இது ஆடுகளத்தில் சிறந்த ஆற்றலை வழங்க உங்களுக்கு வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களின் மிக முக்கியத்தேவை என்ன என்பதை மறுசீரமைக்க செலவிட்ட நேரத்தை நான் மதிக்கிறேன்! யாராவது இதை பிருத்வி ஷாவுக்குக் காட்ட முடியுமா? இது சாத்தியம் தான்! வலிமையான உடல், வலிமையான மனம்!” என பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...