பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு
Travel Contest : அந்நியமான மண்ணிலும் என் இறைவனின் வடிவம்! - அலாஸ்கா பனி மலையின் பேரழகு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இனிது இனிது புதிய இடங்கள் பார்த்தல் , அதனினும் இனிது கண்ட காட்சிகளை மற்றவர்களோடு பகிர்தல்.
ஈராண்டு முயற்சிக்கு பிறகு, எங்களுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அமைந்தது. எனக்கும் என் கணவருக்கும் அமெரிக்கா விசா கிடைத்தது. எங்கள் மகள், மருமகன் மற்றும் பேரன் வசிக்கும் சியாட்டில் (Seattle) நகரமே எங்கள் முதல் இடம். பேரனின் இடைவிடாத அழைப்பும், குடும்பம் மீதான காதலும், எங்களை 18 மணி நேர பயணித்திற்கு தயார் செய்தது. கடந்த ஜூலை மாதம், விமானத்தில் நாங்கள் அமெரிக்காவின் வாஷிங்டனின் டகோமா (Tacoma) விமான நிலத்தில் கால்வைத்தோம்.

எங்கள் மகளும் மருமகனும் இயற்கையையே வாழ்வாகக் கொண்டவர்கள். "எங்குச் சுற்றிப் பார்ப்பது பிடிக்கும்?" என்ற கேள்விக்கு எங்கள் முதல் பதில்: அலாஸ்கா!
அலாஸ்கா சிறு குறிப்பு
அலாஸ்கா, அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய மாநிலமாகும், அமெரிக்காவின் Strategic மற்றும் இயற்கை வளங்களுக்காக இது பெரும் முக்கியத்துவம் உடையதாக உள்ளது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அலாஸ்கா ரஷ்யாவின் பகுதியாக இருந்தது.

1867 ஆம் ஆண்டு, ரஷ்யா அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்கத் தீர்மானித்தது, இதன் மூலம் அமெரிக்க அரசு $7.2 மில்லியன் (அப்போது மிகவும் குறைந்த தொகையாக இருந்தது) இழுபறியுடன் அந்த நிலத்தை வாங்கியது. இந்த ஒப்பந்தம் "The Alaska Purchase" என்ற பெயரில் அறியப்படுகிறது, மேலும் அந்த காலத்தில் பெரும் எதிர்ப்பும் எச்சரிக்கைகளும் ஏற்படுத்தியது. சிலர் "அலாஸ்கா வெறும் பனிக்காடு " என்று கூறினாலும், தற்போது அது அமெரிக்காவின் மிகவும் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது.
அலாஸ்கா பயணம்
சியாடிலிலிருந்து 5 மணி நேர விமானப் பயணமாக இருந்தாலும், உலக வரைபடத்தில் மட்டும் பார்த்த அலாஸ்காவை நேரில் காணும் வாய்ப்பு – நம் இதயத்துக்குள் ஒரு குழந்தை போன்ற உற்சாகத்தை தூண்டியது. நாங்கள் இறங்கிய இடம்: அங்கரேஜ் (Anchorage) – அலாஸ்காவின் இதயமாகக் கருதப்படும் நகரம்.

அங்கரேஜ்(Anchorage)
அங்கரேஜ் பனியால் மூடப்பட்ட மலைச்சரிவுகள், நீல வானம், மற்றும் விரிந்த பசுமை வனங்களால் சூழப்பட்டு, இயற்கையின் ஓர் அபூர்வ காட்சி கொடுக்கும் இடமாகத் திகழ்கிறது.
அங்கரேஜ் விமான நிலையத்தில் உள்ள மூஸ் சிலை (Moose என்பது ஒரு பெரிய பருமனான மான்வகை விலங்காகும்), அது சிலையா? வனத்தின் நிஜ முகமா? என வியக்க செய்தது. அதன் உயிருடன் இருப்பது போல் உள்ள வடிவம், அலாஸ்காவின் வனவிலங்கு வாழ்க்கையை நினைவூட்டுகிறது.
இவ்வாறு மனிதர் உருவாக்கிய சிற்பம், இயற்கையோடு மனிதனுக்கான நெருக்கத்தை, மரியாதையை, மற்றும் அழகு உணர்வை வெளிப்படுத்துவது போல் இருந்தது. ஒரு உயிரினத்தின் மேன்மையை நினைவூட்டும் சிற்பமாகவும், மனிதன்-இயற்கை ஒற்றுமையின் ஓர் சின்னமாகவும் காணப்படுகிறது.

டெனாலி நேஷனல் பார்க்: அமெரிக்காவின் இயற்கை அற்புதம்
டெனாலி, அதன் அற்புதமான இயற்கை காட்சிகளுக்காக பிரசித்திபெற்ற இடம். இது அமெரிக்காவின் ஆறாவது உயரமான மலை மற்றும் இரு மைல் உயரமான மலை உச்சி. இந்த மலை, அறியப்பட்ட மிகப்பெரிய எரிமலைக் கூட்டங்களை கொண்டுள்ளது.
டெனாலி நேஷனல் பார்க் என்பது மிகுந்த பசுமை மற்றும் பனி நிறைந்த மலைகளின் இடமாக பரவலாக அறியப்படுகிறது. இங்கு நீங்கள் பனிப்பாறைகள், காட்டுத் தாவரங்கள் மற்றும் பல விலங்குகளைக் காண முடியும்.
டெனாலி நேஷனல் பார்க் கிட்டத்தட்ட 6 மில்லியன் ஏக்கர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் 5000 கிலோமீட்டர் தூரம் வரை நீங்கள் நெடுந்தூர சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த இடம் உலகில் மிகப் பெரிய இயற்கை அற்புதங்களை வழங்குகிறது.
“பச்சை நிறமே பச்சை நிறமே” என்று மாதவன் பாடிய பாடல் நினைவிருக்கு வந்தது.

சேவார்டின்(Seward) கடற்கரையோர அனுபவம்
அன்றைய பயணத்தில், சேவார்ட்(Seward) என்னும் அழகிய கடற்கரை நகரத்தை அடைந்தோம்.
இங்கு குளிர்காலம் நீண்டது, கோடைக்காலம் மிகக் குறுகியது. சில நாட்களில் 23 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் காணப்படும் எனக்கூறினார்கள். இருந்தாலும், வெப்பநிலை வெறும் 2 டிகிரி செல்சியஸ் மட்டுமே.நாங்கள் சேவார்டில் தங்கி இருந்தபோது, மாலை 9:45க்கு சூரியன் மறைந்தது.
அங்கு பனி பாறைகள், அலையற்ற பசிபிக்(Pacific) பெருங்கடற்கரை, இயற்கையின் அமைதியான வரவேற்பாக எங்களைச் சூழ்ந்தது.Day Cruise எனப்படும் சிறிய கப்பலில் நாங்கள் ஆறு மணி நேர கடல் பயணம் மேற்கொண்டோம். பயணத்தின் முழுவதும், பனிப்பாறைகள் மிதமாக நகரும் காட்சிகள் நம்மை கண்களால் உறைய வைத்தது.
சீல், வால்ரஸ் போன்ற கடல் வாழ் உயிரினங்களை கூட்டம் கூட்டமாக காண முடிந்தது. கடற்பறவைகள் எண்ணிக்கையற்ற வண்ணங்களில் இசைபோல பாடிக் கொண்டு, வானத்தில் பறந்தன.

உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று புத்தகங்களில் வாசித்திருந்தோம். ஆனால், நேரில் அந்த பனிப்பாறைகள் ஒரு ஒரு துண்டாக உருகி, மெல்ல கடலில் விழும் காட்சியைப் பார்த்தபோது நெஞ்சு நெருக்கிக்கொண்டது.
விஞ்ஞானிகள் உலகத்திற்கு கொடுத்த எச்சரிக்கை எவ்வளவு உண்மையானது என்பது இப்போது நமக்கே வெளிப்படையாகத் தெரிந்தது.
அந்தக் காட்சிகள் எல்லாம் என் மனதில் பாரதிதாசனின் வரிகள் போலத் தோன்றின:
"எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி,
ஏழு கடல் அவள் வண்ணமடா!"
உண்மையில், காற்றாய், கடலாய், மாலையாய், கடல் வாழ் உயிரினமாய்,வானத்து பறவையாய், பனி பாறையாய்,
பனியில் உறையும் விலங்காய்,மனித நேயம் கொண்ட மனிதனாய் எல்லாமே ஒரே சக்தியின் வடிவங்கள் என்று உணர முடிந்தது.

பசிபிக் கடற்கரையோரம் நடக்கையில், பளிச்சென பிரகாசிக்கும் கூழாங்கற்கள் சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அதில் லிங்க வடிவம் போன்ற கல் ஒன்று சிக்கியது. என் மனதில் ஒரு அற்புதம் நுழைந்தது – இது அழியாத நினைவாக இருக்கட்டும் என்று எண்ணி, மகிழ்ச்சியோடு அதை எடுத்துவந்து பூஜை அறையில் வைத்து கொண்டேன்.
அந்த தருணத்தில் என் உள்ளத்தில் ஓர் பாடல் ஒலித்தது:
"தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
அந்த வாக்கியங்கள் என் உள்ளத்தில் மெல்லிசையாக ஒலித்தபடி இருந்தன. அந்நியமான மண்ணிலும் இறைவனின் ஆழமான அன்பும், சக்தியும் இயற்கையின் வடிவாக நிறைந்து இருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன்.

அலாஸ்காவின் வானத்திலும் கடலிலும் பளபளக்கும் நீல நிறமும்,
மலைகளை முத்துப்போல மூடியிருந்த வெண்மை பனியும்
இன்றும் என் உள்ளத்தில் பனிக்காற்றாய் பனிக்கின்றன.
அந்த தருணங்களை மீண்டும் மீண்டும் நினைக்கும் போதெல்லாம், என் நெஞ்சில் ஒரு அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.