செய்திகள் :

Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த புதிய ராணுவ தளவாடம்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், 'கோல்டன் டோம்' என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்கவுள்ளார்.

இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 பில்லியன் டாலர். ஆரம்பகட்டமாக, இந்தத் தளவாடத்திற்கு 25 பில்லியன் டாலர் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், "அமெரிக்க ராணுவத்திற்காக அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பு கட்டப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த அதிநவீன அமைப்பிற்கான டிசைனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் | கோல்டன் டோம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் | கோல்டன் டோம்

கோல்டன் டோம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட பின், உலகத்தின் அடுத்த பக்கத்தில் இருந்து அல்லது விண்வெளியில் இருந்து கூட ஏவுகணையை ஏவினாலும், அது அமெரிக்காவில் விழாதப்படி இந்த அமைப்பு தடுத்துவிடும்.

இந்த அமைப்பு நமது வெற்றிக்கும், நமது நாட்டிற்கும் மிக முக்கியமானது.

இந்த முயற்சியை அமெரிக்காவின் விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் தலைமையேற்று நடத்துவார். இந்த முயற்சியில் பங்கு கொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது" என்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார்.

இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 175 பில்லியன் டாலர் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தக் கோல்டன் டோமால் ஆகும் செலவு 161 பில்லியன் - 542 பில்லியன் டாலர் என்று கணக்கிட்டுள்ளது.

இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது கிட்டதட்ட இஸ்ரேலின் 'ஐரான் டோமை' போன்றதாகும். ஆனால், அமெரிக்காவின் கோல்டன் டோம் கட்டமைப்புக்கு ரஷ்யா மற்றும் சீனா முன்னரே எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்கிறார் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாத... மேலும் பார்க்க

`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்

டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன?

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள... மேலும் பார்க்க

Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, "இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்" என்று கூறும் வீடியோ இர... மேலும் பார்க்க

Pakistan: `ஃபீல்ட் மார்ஷல்' - ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு! - பின்னணி என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'. மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த... மேலும் பார்க்க

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க