செய்திகள் :

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' - திருச்சியில் விஜய் பரப்புரை!

post image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார்.

”ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு மக்களை பார்க்க வந்துள்ளேன். அறிஞர் அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும் முதன்முதலில் திருச்சியில் தான் மாநாட்டை நடத்தினார். நமது கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த இடம் திருச்சி தான். திருச்சியில் இருந்து தொடங்கினால் திருப்புமுனையாக அமையும்" என்று பேசினார். தொடர்ந்து பேசிய விஜய்யின் குரல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக்கில் அவரது வார்த்தைகள் தொண்டர்களுக்கு கேட்கவில்லை.

திருச்சியில் விஜய் பரப்புரை

பின்னர் தொடர்ந்து ஆவேசமாக தொண்டர்களை பார்த்து பேசிய விஜய், ``வரப்போகும் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு போடுவீங்களா? அரசு உதவியை தந்து விட்டு கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.... மகளிர் உதவி தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

நீட் தேர்வு, கல்விக் கடனை திமுக ரத்து செய்யவில்லை, ஆசிரியர்களுக்கான நிரந்தர பணி நியமனம் , மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு செய்தீர்களா? வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள் கொடுத்தார்களா? இவ்வாறு செய்வதாக கூறிவிட்டு செய்யாதது நம்பிக்கை மோசடி" என்று கூறியிருக்கிறார் விஜய். மதுரை மாநாட்டின் போது முதலமைச்சரை அங்கிள் என அழைத்தவர், இந்த முறை மைடியர் சி.எம் சார் என்று அழைத்திருக்கிறார்.

திருச்சிக்கு உட்பட்ட 9 தொகுதிகளில் எந்தெந்த விஷயங்கள் கிடப்பில் இருக்கிறது என்பதை விஜய் பட்டியலிட்டு இருக்கிறார். ``இனியும் மக்கள் திமுக-வை நம்ப மாட்டார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால் கல்வி, ரேஷன், சாலை வசதி, மின்சாரம், சுகாதாரம் போன்ற இந்த மிக முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிறப்பாக செய்வோம். சட்ட ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்" என்று விஜய் இந்த பரப்பரையில் பேசியிருக்கிறார்.

திருச்சியில் விஜய் பரப்புரை

``வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக-வுக்கா உங்கள் ஓட்டு? மகளிர் விடியல் பயணம் என்று அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை. வாக்குறுதியில் கூறிய திட்டங்களை செயல்படுத்தினார்களா? சொன்னீர்களே செய்தீர்களா?" என்று ஜெயலலிதா பாணியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க

Modi: ’மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்; விரைவில் புதிய விடியல் மலரும்...’ - பிரதமர் மோடி பேச்சு

மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.7500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

``உயிருக்கு ஆபத்து'' - VAO அலுவலகத்துக்குள் செல்ல அஞ்சும் மக்கள்; மரத்தடியில் நடக்கும் அரசுப் பணிகள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய பங்காற்றி வரும் இடம் கிராம நிர்வாக அலுவலர் ... மேலும் பார்க்க

TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதில் சிக்கல்! - என்ன நடக்கிறது?

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க