லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
Udhayanidhi: "200 இடங்கள் அல்ல... 200-க்கும் மேல் திமுக வெல்லும்" - உதயநிதி உறுதி
இன்று (டிசம்பர் 22) சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது...
"இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் எந்தத் தேர்தலிலும் தோற்கவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க-விற்கு பெண்களின் ஆதரவு அபரிமிதமாக இருக்கின்றது.
2026-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்கள் அல்ல... 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். அந்த வெற்றி தமிழ்நாட்டிற்கான வெற்றியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் வெற்றியாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் தி.மு.க-வை வலுப்படுத்த வேண்டும். தி.மு.க-வின் கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு அணியும் பாடுபடும்" என்று பேசியுள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச தி.மு.க செயற்குழு கூடியுள்ளது. இது தான் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் முதல் செயற்குழுக் கூட்டம் ஆகும். இந்த செயற்குழுக் கூட்டத்தில் அமித்ஷா மற்றும் பா.ஜ.க-விற்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...