”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?
மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.
டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.
இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணம் 2,30,000 பக்கங்களைக் கொண்டது ஆகும்.

துளசி கப்பார்ட்டின் கூற்று
இது குறித்து, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், "டாக்டர் மார்டின் லூதர் கிங் கொலை விசாரணையை முழுவதும் தெரிந்துகொள்ள அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்தனர்.
நாட்டின் மிக முக்கிய துயர சம்பவமான மார்டின் லூதர் கிங் கொலை குறித்து மக்கள் முழுவதுமாக, வெளிப்படை தன்மையுடன் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட 2.3 லட்ச ஆவண பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
மார்டின் லூதர் கிங் மகன், மகள் கூறுவது என்ன?
மார்டின் லூதர் கிங்கின் மகன் மார்டின் லூதர் கிங் III மற்றும் பெர்னிஸ் கிங், "நாங்கள் வெளிப்படைத் தன்மைக்கும், உண்மைக்கும் ஆதரவு தருகிறோம். ஆனால், இந்த ஆவணம் எங்களது தந்தையின் பெயரை கெடுக்கலாம்.
காரணம், அப்போதைய எஃப்.பி.ஐ இயக்குநர் எட்கர் ஹூவர் எங்கள் தந்தையின் பெயரையும், அவரது சிவில் உரிமை போராட்டத்தையும் கெடுக்க முயன்று வந்தார்.
அதனால், இந்த ஆவணத்தைப் படிப்பவர்கள் எங்கள் குடும்பத்தை மனதில் கொண்டும், மரியாதையுடனும் படியுங்கள்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்

புதிது அல்ல...
ட்ரம்ப் அரசாங்கம் இந்த மாதிரியான ஆவணங்களை வெளியிடுவது புதிது அல்ல.
கடந்த மார்ச் மாதம், ஜான் எஃப்.கென்னடி கொலை ஆவணம், கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் எஃப்.கென்னடி கொலை ஆவணத்தையும் வெளியிட்டது.