செய்திகள் :

Vaadivaasal: 'இன்னும் 10 நாள்களில் சொல்லுவேன்'- வாடிவாசல் குறித்து அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

post image

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'.

அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மிஷ்கின்
மிஷ்கின்

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது, " பேரழகன் சூர்யாவும், பெரும் அறிவாளி வெற்றிமாறனும் இணைந்தால் மிகச்சிறந்த படம் நமக்கு கிடைக்கும். அப்படிபட்ட வாடிவாசல் படத்தை விரைவில் தொடங்கும்படி வெற்றியை கேட்டுக்கொள்கிறேன்" என்று மிஷ்கின் பேசியிருந்தார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், " சில தொழில்நுட்ப காரணங்களால் இப்போது என்னால் எதுவும் முடியாது. இன்னும் 10 நாள்களில் அப்டேட் சொல்லுவேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Bad Girl: "எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி, விசில் அடித்திருப்போம்; அதனால்" - மிஷ்கின்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்த... மேலும் பார்க்க

``BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' - வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத... மேலும் பார்க்க

Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் சுற்றி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிர... மேலும் பார்க்க

Ameer: "விஜய் நடத்தியது மாநாடு மாதிரி இல்ல" - தவெக குறித்து இயக்குநர் அமீர் சொல்வது என்ன?

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப... மேலும் பார்க்க

Ajith Kumar: "என்னை பிரபலப்படுத்தாதீங்க; அதற்குப் பதில்" - ரசிகர்களுக்கு அஜித்தின் அறிவுரை என்ன?

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.... மேலும் பார்க்க