பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
Vijay : 'உயிரின் மதிப்பு தெரியுமா... மன்னராட்சிக்கு புரியுமா?' - கோஷம் போடப்போகும் விஜய்?
தவெக சார்பில் சிவகங்கை காவல் மரணத்தை கண்டித்து சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய்யும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக திமுக அரசைக் கண்டித்து கடுமையான கோஷங்களை தவெகவினர் எழுப்பி வருகின்றனர்.

கடந்த நான்காண்டுகளில் லாக்கப் டெத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பனையூரில் விஜய் நேற்று சந்தித்திருந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு உங்களோடு என்றும் நிற்பேன் என உறுதியளித்து நிதியுதவியும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று சிவானந்தம் சாலையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திலும் விஜய் பங்கேற்கிறார்.10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் விஜய் பேசுவதற்கான மேடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதில், 'திரு. மு.க ஸ்டாலின் தலைமையிலான சமூக அநீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். #TNDemandsJustice என வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது

மேலும், 'Sorry வேண்டாம் நீதி வேண்டும்.' 'உயிரின் மதிப்பு புரியுமா மன்னராட்சிக்கு புரியுமா..' 'SIT இருக்க சிபிஐ எதற்கு?' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாசகங்களை விஜய்யும் கோஷமாக எழுப்புவார் என தெரிகிறது.