Vikatan Digital Awards 2025: 'சம்பவக் களப்!' - Best Automobile Channel Winner - Bike Care 360
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Automobile Channel
இப்பிரிவில் Bike Care 360 Tamil, Vignesh Elangovan, Moto Wagon, Birlas Parvai, Fazil Abbas, Mr Automotive Enthusiast, Auto Zoom, VSK Motors, திருப்பூர் மோகன், கலாம் கார்ஸ் ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, Cricanandha சேனல்!

Best Automobile Channel - Bike Care 360° Tamil
டிஜிட்டல் தொழில்நுட்பம் நிகழ்த்திய ஆகப்பெரும் சாதனையே கிராமம்-நகரம் என்ற சுவரைத் தகர்த்ததுதான். இதோ, அதற்கு எடுத்துக்காட்டு, 'Bike Care 360° Tamil'. மேலூரில் மெக்கானிக் ஷெட், பைக் உதிரிபாகங்கள் கடை நடத்திய நண்பர்கள் இணைந்து விளையாட்டாக ஆரம்பித்த யூடியூப் சேனல், இன்றைக்கு இ-காமர்ஸ் பிராண்ட் ஆகும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

மாமா - மருமகன், நண்பர்கள் எமோஷன் என சென்டிமென்ட்டையும் தூவி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த டாப் ஸ்பீடு சம்பவக் கிளப்புக்கு Best Automobile Channel விருது வழங்கி கௌரவிக்கிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...