செய்திகள் :

What to watch on Theatre: வீர தீர சூரன், Phule, கேங்கர்ஸ், Empuraan; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

கேங்கர்ஸ் (தமிழ்)

கேங்கர்ஸ் (தமிழ்)
கேங்கர்ஸ் (தமிழ்)

சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'.

அரசன் கோட்டையிலுள்ள ஒரு பள்ளி மாணவி காணாமல் போகிறார். அவரைத் தேடித் தரச் சொல்லி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா (கேத்ரின் தெரசா) புகாரளிக்கிறார்.

பள்ளியில் நடக்கும் அராஜகத்திற்கு எதிராக அதே பள்ளியின் பி.இ.டி மாஸ்டர்களாக சுந்தர்.சி, வடிவேலு களமிறங்குகின்றன. மாணவி கடத்தல் பின்னணி, சுந்தர்.சி கதாப்பத்திரத்தின் பின்னணி என்ன என்பதுதான் இதன் கதைக்களம்.

Gangers Review: `புதுசு இல்ல, ஆனா பழசும் ஆகலை!' - சுந்தர்.சி - வடிவேலு ரீ-யூனியன் எப்படியிருக்கிறது?

சுமோ (தமிழ்)

சுமோ (தமிழ்)
சுமோ (தமிழ்)

ஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், யோஷினோரி தஷிரோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சுமோ'.

ஜப்பான் குத்துச் சண்டை வீரர் போல இருக்கும் சுமோ யார்? ஜப்பானிலிருந்து சென்னைக்கு எப்படி வந்தார்? அடையாளம் இழந்து தவிக்கும் அவரது உண்மையான அடையாளம் என்ன? என்பதுதான் இதன் கதைக்களம்.

காமெடி, கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வல்லமை (தமிழ்)

வல்லமை
வல்லமை

கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி, திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வல்லமை'.

தன் குழந்தைக்காக எந்த எல்லைக்கும் சென்று அதிகாரத்தை எதிர்க்கும் தந்தையின் பாசப்போராட்டம்தான் இதன் கதைக்களம்.

க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Thudarum (மலையாளம்)

Thudarum (மலையாளம்)
Thudarum (மலையாளம்)

’சவுதி வெள்ளக்கா’ பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'Thudarum'.

மனைவி, குழந்தைக்களுடன் சந்தோஷமாக வாழும் மோகன்லாலின் வாழ்க்கையில் திடீரேன வரும் பிரச்னை அவரது வாழ்வைப் எப்படி மாற்றியது என்பதுதான் இதன் கதைக்களம்.

ஜாலியான அதேசமயம் திரில்லர் நிறைந்த இந்தக் குடும்பத் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Chaurya Paatam (தெலுங்கு)

Chaurya Paatam
Chaurya Paatam

நிகில் இயக்கத்தில் இந்திரா ராம், பயல், மாஸ்ட் அலி, ராஜிவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Chaurya Paatam'.

காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sarangapani Jathakam (தெலுங்கு)

Sarangapani Jathakam
Sarangapani Jathakam

மோகன கிருஷ்ணா இயக்கத்தில் ப்ரியதர்ஷி, ரூபா, தனிகெல்லா பரணி, கிஷோர், சிவநாரயணா, ஹர்ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Sarangapani Jathakam'.

ஜோதிடத்தை நம்பும் நண்பர்களால் நடக்கும் கலாட்டா நிறைந்த சிக்கல்கள்தான் இதன் கதைக்களம். காமெடி கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Phule (இந்தி)

Phule - Anand Mahadevan
Phule - Anand Mahadevan

ஆனந்த் மஹாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி, பத்ரலேகா நடிப்பில் சாதி மற்றும் பாலின பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகியிருக்கிறது 'Phule'.

பல தடைகளுக்குப் பிறகு இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Ground Zero (இந்தி)

Ground Zero
Ground Zero

தேஜஸ் விஜய் இயக்கத்தில் எம்ரான் ஹஸ்மி, சாய், முகேஷ் திவாரி, சோயா, லலித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ground Zero'.

2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் பற்றிய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Until Dawn (ஆங்கிலம்)

Until Dawn (ஆங்கிலம்)
Until Dawn (ஆங்கிலம்)

டேவிட் எஃப். சான்பெர்க் இயக்கத்தில் பீட்டர், ஒடேஷா, மையா மிட்சல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Until Dawn'.

ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

The Accountant 2 (ஆங்கிலம்)

The Accountant 2
The Accountant 2

காவின் ஓ கொனூர் இயக்கத்தில் பென் அஃப்லெக், ஜோன் பெர்த்தல், ராபின்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Accountant 2'.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Pink Floyd at Pompeii MCMLXXII (ஆங்கிலம்)

Pink Floyd at Pompeii MCMLXXII (ஆங்கிலம்)
Pink Floyd at Pompeii MCMLXXII (ஆங்கிலம்)

1972ம் ஆண்டு பிரபல இயக்குநர் ஆட்ரியன் மார்பென் இயக்கத்தில் வெளியான இசை பற்றிய ஆவணப்படமான இது 4K வடிவத்தில் மாற்றப்பட்டு இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Jewel thief the heist begins (இந்தி) - Netflix

havoc (ஆங்கிலம்) - Netflix

Ayyana Mane, Jewel, havoc
Ayyana Mane, Jewel, havoc

வெப்சீரிஸ்

Ayyana Mane (கன்னடம்) - Zee5

You series 5 (ஆங்கிலம்) - Netflix

வீர தீர சூரன் பாகம் 2 - Amazon Prime Video

வீர தீர சூரன் பாகம் 2
வீர தீர சூரன் பாகம் 2

S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'.  

ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரவுடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?

L2: Empuraan (மலையாளம், தமிழ்)

L2 Empuraan
L2 Empuraan

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ், சச்சின் கெடெக்கர், விவேக் ஓபராய், அபிமன்யு சிங், சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், ஃபாசில், சுராஜ் வெஞ்சாரமூடு உருவாகியிருக்கும் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'L2: Empuraan'.

மதமும் அரசியலும் சேர்வது, திரியும் நெருப்பும் சேர்வது போன்றது என்ற அரசியலைச் சமரசமின்றி ஆக்‌ஷன் திரில்லர் கதையோடு சொல்லியிருக்கும் இத்திரைப்படம் 'Jio Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நிறம் மாறும் உலகில் (தமிழ்) - Sun Nxt

நிறம் மாறும் உலகில் (தமிழ்) - Sun Nxt

பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் துளசி, வடிவுக்கரசி, கனிஷா, தர்ஷிகா, பாரதிராஜா, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், நட்டி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'நிறம் மாறும் உலகில்'.

அகங்காரம், ஆணவம், அடாவடி எனச் சுற்றித் திரியும் ஆண்கள் மத்தியில் அம்மா, மனைவி எனப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இதன் கதைக்களம்.

இத்திரைப்படம் 'Sun Nxt' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Baby Girl (ஆங்கிலம்) - Amazon Prime Video

Baby Girl (ஆங்கிலம்)

ஹெலினா ரெஜின் இயக்கத்தில் நிக்கோல் கிட்மேன், ஹாரிஸ் டிக்கிட்சன், ஆண்டனியோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baby Girl'. 18+ திரில்லர்.

உறவுச் சிக்கல்கள் பற்றிய திரைப்படமான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதில் இந்த வாரம் நீங்கள் பார்க்கப்போகும் திரைப்படத்தைக் கமென்ட்டில் பதிவிடவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Nizhal Kudai: ``என் வாழ்க்கையில் அக்கா மாதிரி நபரைப் பார்த்ததே இல்லை..'' - தேவயானி குறித்து நகுல்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவு... மேலும் பார்க்க

'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான் பேசியது என்ன?

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவும... மேலும் பார்க்க

Gangers: "ஒரே சிரிப்பு சரவெடி; வடிவேல் சாரின் மேஜிக்..." - கேங்கர்ஸ் படக்குழுவைப் பாராட்டிய சிம்பு

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். தவிர மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

"எவ்வளவோ தொந்தரவுகள் செய்திருக்கிறேன்; ஆனாலும்..." - திருமண நாளில் மனைவிக்கு BMW காரை பரிசளித்த SAC

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்.இந்த தம்பதி நேற்றைய தினம் தங்களுடைய 52-வது திருமண நாளைக் கொ... மேலும் பார்க்க

``கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது!'' - கேம் சேஞ்சர் பற்றி கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்த... மேலும் பார்க்க