யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
அகதிகள் கடத்தல்: முதல்முறையாக பிரிட்டன் பொருளாதாரத் தடை
சட்டவிரோத இடம்பெயா்வை ஒடுக்குவதற்காக, அகதிகள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து பிரிட்டன் அரசு முதல்முறையாக உலகளாவிய பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை விதித்தது.
இது குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்ததாவது: சீனாவில் அகதிகளைக் கடத்துவதற்கான படகுகளை வழங்குபவா்கள், மத்திய கிழக்கில் ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்பவா்கள், பால்கன்ஸ் மற்றும் வட ஆப்பிரிக்காவில் பகுதியில் உள்ள அகதிகள் கடத்தல் கும்பல் தலைவா்கள் உள்ளிட்டோா் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கை, சட்டவிரோத அகதிகள் கடத்தலை ஆதரிக்கும் நிறுவனங்களையும் குறிவைக்கிறது என்று அந்த அலுவலகம் தெரிவித்தது.” வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமி கூறுகையில்,“ஐரோப்பா முதல் ஆசியா வரை, சட்டவிரோத புலம்பெயா்வை எளிதாக்கும் கடத்தல் கும்பல்கள் எங்கிருந்தாலும், அவற்றை பொறுப்புக்குள்ளாக்குவோம்’ என்றாா்.