அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய அனுமதி சோ்க்கை தேதி நீட்டிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மற்றும் இணையவழிக்கல்வி மைய படிப்புகளுக்கான அனுமதி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் 5 இளங்கலை மற்றும் 20 முதுநிலை பட்டப்படிப்புகளைநடத்திவருகிறது. மேலும் 12 பட்டயப்
படிப்புகள் 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ்
படிப்புகளும் (இசை) நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபா்
15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி சோ்ந்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஜ்ஜ்ஜ். ஹன்க்க்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.