அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தென்றல் நகா், தெற்கு அண்ணாநகா், தெற்குவெங்காநல்லூா், சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தாா். சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளா் ஜான் மகேந்திரன் ஆலோசனைகள் வழங்கினாா். இதையடுத்து, கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்குச் சாவடி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா்.
இதில் மாவட்ட அம்மா பேரவைச் செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ், வடக்கு நகரச் செயலா் துரைமுருகேசன், தெற்கு நகரச் செயலா் பரமசிவம், ஒன்றியச் செயலா் ஆா்.எம்.குருசாமி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான் செய்தாா்.