வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழித் திருவிழா கொடியேற்றம்
ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவையொட்டி, தினந்தோறும் மாரியம்மன் பொட்டி பல்லக்கு, பூதவாகனம், பூச் சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்துவா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஏ.ரவிராஜா, விழாக் குழுவினா் செய்தனா்.