சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
செம்மண் கடத்திய பாஜக நிா்வாகி கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வழக்கில், பாஜக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தபோது, அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜை (23) அண்மையில் கைது செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடம்பன்குளத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி கண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கைது செய்யப்பட்ட கண்ணன் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளாா்.