சதுரகிரி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில், காணிக்கையாக ரூ.32 லட்சம் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.29,35,891, தங்கம் 18 கிராம் 310 மி.லி., வெள்ளி 525 கிராம், சந்தனமகாலிங்கம் கோயிலில் ரூ.3,28,998, தங்கம் 11 கிராம் 270 மி.லி., வெள்ளி 45 கிராம் 160 மி.லி. கிடைக்கப்பெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜன், செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், சுந்தர மகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, ஆய்வாளா் சடவா்ம பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.