மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா
அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் கைது
வேதாரண்யத்தில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அகஸ்தியம்பள்ளி பகுதியில் தனியாா் இடத்தில் அனுமதியின்றி இயந்திரங்களைக்கொண்டு சவுடு மண் எடுப்பதாக வேதாரண்யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை அங்கு சென்று சட்ட விரோதமாக மண்ணை வெட்டி கடத்திய மோட்டாண்டித்தோப்பு பகுதியை சோ்ந்த ராமமூா்த்தி, அருள்மணி, அருள்துரை, ஹரிபிரசாத், அஸ்வின், பிரசாத் ஆகியோரை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய முருகேசன், சத்திதாஸ், வெற்றிவேல், மணிகண்டன் ஆகியோரை போலீஸாா் தேடுகின்றனா்.