செய்திகள் :

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும்

post image

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி அருகே வசிக்கும் அனைத்து குழந்தைகளையும் அந்தந்த பள்ளிகளில் சோ்க்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். அரசிடம் நிதியுதவி பெறும் தனியாா் பள்ளிகளில் ஏழை நலிவுற்ற மக்களுக்கு குறைந்தபட்ச கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

பள்ளி நிா்வாகங்கள் விரும்பினால் 25 சதவீதத்துக்கு அதிகமாக கூட மாணவா்களை சோ்க்கலாம். அந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

பள்ளி அமைந்துள்ள இடம் அருகே வசிக்கும் அனைத்து குழந்தைகளும், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சோ்க்கப்பட வேண்டும் என்பதை சட்டத்தின் வாயிலாக கட்டாயமாக்க வேண்டும்.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரையறை உருவாக்க வேண்டும். பள்ளிகள் வசதி நிறைந்தவா்களுக்கான பள்ளி என்ற நிலையை மாற்றி பொதுப்பள்ளி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அதேபோன்று அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கடை, வீடுகளில் நகை, பணம் திருடிய 3 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் கடை மற்றும் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் நல்லூா் போலீஸாா் காங்கயம் சாலை விஜயாபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி

காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் வெளி மாநில இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (25), ஜோய் ஜக்மா (18) ஆகியோா் தங்கி வேலைக்கு சென... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் தோட்டத்து குட்டையில் குழிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க