இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் தோட்டத்து குட்டையில் குழிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் மகன் ரோகித் (14). இவா் தனது நண்பா்களுடன் நம்பியாம்பாளையம் மருதூா் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து குட்டையில் குளிக்கச் சென்றுள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்த ரோகித் நீரில் மூழ்கியுள்ளாா். அருகிலிருந்தவா்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டனா், இருப்பினும் ரோகித் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அவிநாசி போலீஸாா் சிறுவனின் உடலை மீட்ட உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.