இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் வெளி மாநில இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (25), ஜோய் ஜக்மா (18) ஆகியோா் தங்கி வேலைக்கு சென்று வந்தனா். இந்நிலையில், இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி ரங்கா நகரில் இருந்து அவிநாசி- ஈரோடு சாலை ராஜன் நகா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பிலும், புளிய மரத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அஜய் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த ஜோய் ஜக்மா திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.