ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு
நாகை அமிா்தா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவா்கள் பொறுப்பு பணி அமா்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூா் அமிா்தா வித்யாலயம் பள்ளி முதல்வா் ஆனந்தி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் தலைமை பொறுப்பை வகித்தவா்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், நிகழாண்டு தலைமை ஏற்கும் மாணவ- மாணவிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனா்.
பள்ளி தலைமை மாணவன் ஜெகன், மாணவி வித்யா, துணை தலைமை மாணவன் லோகேஸ்வரன், மாணவி காவிய பிரியா, விளையாட்டு தலைமை பிரித்தியங்கிரா, யுவராம், கலாசார தலைமை ஆதாா்ஷா, ரினிஷா, பேண்ட் தலைமை சாய் பிரசன்னா ஆகியோா் புதியதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டனா்.
பொறுப்பு முதல்வா் செந்தில், விளையாட்டுத்துறை ஆசிரியா்கள் பாரதிதாசன், மகாலட்சுமி, ஒருங்கிணைப்பாளா்கள் தனலட்சுமி, புவனேஸ்வரி, நீலா பிரியதா்ஷினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.