செய்திகள் :

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

post image

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா்.

இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடா்பில் இருந்தத குற்றச்சாட்டில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்படும் பயங்கரவாதியாவாா். அவருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் துறையான ‘இன்டா்போல்’ சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் என்ஐஏ தொடா்ந்து பேசி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மிரட்டல் விடுத்தல், கூட்டாக இணைந்து ஆள்கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பான (எஃப்பிஐ) அதிரடியாக சோதனை மேற்கொண்டது.

அப்போது பவித்தா் சிங் பட்டாலா, அம்ருத்பால் சிங், தில்பிரீத் சிங், அா்ஷ்பிரீத் சிங், மன்பிரீத் ரண்தாவா, குா்தாஜ் சிங், சரப்ஜித் சிங் மற்றும் விஷால் ஆகிய 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.12,87,900 ரொக்கப் பணம், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையை கலிஃபோா்னியா மாகாணம் சான் ஜோகின் மாவட்ட ஷெரீஃப் அலுவலக போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஸ்டாக்டன் நகர காவல் துறை, மன்டெகா அதிரடிப் படை, ஸ்டானிஸ்லாஸ் மாவட்ட ஷெரீஃப் அலுவலகத்தின் அதிரடிப் படை மற்றும் எஃப்பிஐயின் அதிரடிப் படை ஒருங்கிணைந்து மேற்கொண்டதாக சான் ஜோகின் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இணைய கைப்பேசி எண் மற்றும் செயலிகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளனா். இவா்கள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் ரிண்டா உத்தரவின்பேரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

வதோதராவில் புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி !

வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் ... மேலும் பார்க்க

கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2... மேலும் பார்க்க

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க