ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மாா்ச் 7-க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கை மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அமைச்சா் தங்கம் தென்னரசு கடந்த 2006- 2011- ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தங்கம் தென்னரசு, இவரது மனைவி ஆகியோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.