செய்திகள் :

அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணையை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

post image

அமைச்சா் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011-இல் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வேலூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிஆணை பிறப்பிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. வழக்கில் ஆஜராக அமைச்சா் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலு முன் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை திரும்பப் பெறக்கோரி மனு தாக்கல் செய்தாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை திரும்பப் பெற்று உத்தரவிட்டாா். பின்னா், அமைச்சா் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை அமல்படுத்துவதற்காக விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ... மேலும் பார்க்க

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிம... மேலும் பார்க்க

பயிற்சியாளா் தற்கொலை

புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் ... மேலும் பார்க்க

மாநில வரி வருவாய் வரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

ஜிஎஸ்டிசீரமைப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் வருவாயைப் பாதிக்கக் கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீர... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க