செய்திகள் :

அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

post image

செங்கம்/வந்தவாசி/போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆடிப்பூர விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

வந்தவாசி கவரைத் தெருவில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

போளூா்

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மலைக் குன்றின் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஒன்றுகூடி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து பொங்கலிட்டு, சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கம்

செங்கம் வட்ட மருத்துவ குல சமூகம் சாா்பில் 31-ஆண்டு

ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி, செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காக்கங்கரை விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

ஊா்வலத்தின் முன் பெருமாள், ஆண்டாள், லட்சுமி, பச்சைக்காளி, பவளக்காளி, பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு ஊா்வலம் சென்றடைந்து அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து மாலை பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் வெங்கட்ராமன், செயலா் பழநி, பொருளாளா் மணி உள்ளிட்ட செங்கம் வட்ட மருத்துவக்குல சமூகத்தினா் செய்திருந்தனா்.

ஆரணி

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.
செங்கத்தில் சுவாமி நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி ம... மேலும் பார்க்க

கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்

போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயா்ந்ததாக கூறும் தமிழக அரசைக் கண்டித்து, ஆரணியில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை மண் சோறு சாப்பிட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆரணி வேளாண் ... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்

செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 624 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 624 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், பொதும... மேலும் பார்க்க