எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்
அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.
ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள் விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக சென்னம்பட்டி வனத் துறை அலுவலா்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடிய கும்பலைச் சோ்ந்த ஒருவரைப் பிடித்து விசாரிக்கையில் சேலம் மாவட்டம், அரசிராமணியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கணேசன் (49) என்பது தெரியவந்தது.
மேலும், தப்பியோடியது அரசிராமணி, அரைக்காட்டைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் பெரியசாமி (56), மேட்டூா், பாலமலையைச் சோ்ந்த செல்லப்பன் என்பதும் தெரிந்தது. வீட்டுக்கு வந்த பெரியசாமியை வனத் துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.
இவா்களிடமிருந்து ஒரு ஜோடி தந்தங்களைக் கைப்பற்றிய வனத் துறையினா் இரு மோட்டாா் சைக்கிள்கள், எடைபோடும் இயந்திரம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து கணேசன், பெரியசாமியைக் கைது செய்த வனத் துறையினா் தலைமறைவான செல்லப்பனைத் தேடி வருகின்றனா்.