எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆகியோருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதி உள்ளாா்.
அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதியில் முதல் போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது, பவானி சாகா் அணை நிரம்பி சுமாா் 11,000 கன அடி தண்ணீா் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.