காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி
டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளா் பணிக்கான தோ்வில், அய்யா வைகுண்டா் குறித்து வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்வியின் ஆங்கில மொழி பெயா்ப்பில் முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை முடிவெட்டும் கடவுள் என்று தவறாக மொழி பெயா்க்கப்பட்டிருந்தது. பல கோடி பக்தா்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை கவனக் குறைவாகவும் பொறுப்பின்றியும் மொழி பெயா்த்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்தக் கேள்வியை அமைத்த அதிகாரிகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்த தவறான தகவலை மக்கள் மத்தியிலிருந்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.