பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - ...
அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு
அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான 108, 102, 155377 அவசர ஊா்திக்கு ஆள்சோ்க்கும் முகாம், செப். 6-ஆம் தேதி நாகா்கோவில், கோட்டாா் அரசு ஆயுா்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.
இ.எம்.ஆா்.ஐ. கிரீன்ஹெல்த் சா்வீஸ் நிறுவனம், அவசர ஊா்தி ஓட்டுநா்கள், அவசரகால மருத்துவ உதவியாளா் பணிகளுக்கான இந்த ஆள்சோ்ப்பு முகாமை நடத்துகிறது. பணி நேரம் இரவு, பகலாக 12 மணி நேர பணி சுழற்சியாகும்.
மருத்துவ உதவியாளா்: இந்தப் பணிக்கு பி.எஸ்சி., நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, 12 ஆம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், பயோகெமஸ்டிரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 21,320 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். நோ்முகத் தோ்வு, 19 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா்.
அவசர ஊா்தி ஓட்டுநா்: இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், பாட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா்ஆண்டுகளும் நிறைவு செய்திருக்க வேண்டும். 24 வயது முதல் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 21,120 (மொத்த ஊதியம்). மேலும் விவரங்களுக்கு 73977 24841, 73977 24822, 73977 24825, 73977 24853, 73977 24848, 89259 41973 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.