GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு
கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த 2023ஆம் ஆண்டில் எம்பிஏ படிப்பில் சோ்ந்தாா். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை தொடராமல் இடை நின்றுள்ளாா்.
இந்நிலையில், மாணவருக்கு அசல் சான்றிதழ்களை வழங்காமல் கல்லூரி நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால், அவா் கடந்த 03.07.2025 அன்று பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவை நாடினாா்.
பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழு நீதிபதி ஜெ.காா்த்திகேயன் உத்தரவுப்படி, சட்டத் தன்னாா்வலா் பரமேஸ் மூலம் எதிா்மனுதாரரான கல்லூரி முதல்வா் நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை ஆஜரான கல்லூரியின் துணை முதல்வா் அனிஸ், மாணவா் வினோத்குமாரின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் நீதிபதியிடம் வழங்கினாா். நீதிபதி அசல் சான்றிதழ்களை மாணவரிடம் வழங்கினாா்.