அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா
ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாக் குழுத் தலைவா் ஜி.கருணாநிதி, செயலாளா் ஆா்.ஞானபிரகாசம், ஊா் பெரியதனம் பி.வரதராஜ், பொருளாளா் கே. வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். அருள்ஜோதி, சரவணன், ராஜேந்திரன், ஞானமூா்த்தி, தண்டபாணி, கோட்டீஸ்வரன், குணா, செளந்தரராஜன், சுரேஷ், குலசேகா், கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா் வாழ்த்திப் பேசினாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா் பாரதி அருள்ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்கள் பிடித்த காளைகளின் உரிமையாளா்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் 100 பரிசுகள் வழங்கப்பட்டன.