அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மருத்துவ சேவை பிரிவு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து, குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணனிடம் கேட்டறிந்தாா். மேலும், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் முறையாக கிடைக்கிறதா என்பதை அங்கிருந்த மக்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
பின்னா், வாணாதிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். அடுத்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பாா்வையிட்ட ஆட்சியா் மதிய உணவு, குடிநீா் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா். கடலங்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை பாா்வையிட்டு, துறை சாா்ந்த சேவை அரங்குகளை ஆய்வு செய்து, பெறப்பட்ட மனுக்களின் விவரங்களை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஷோபனா ஆகியோா் உடனிருந்தனா்.