ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறை தலைவா் எஸ். சந்திரசேகரன், இணை பேராசிரியா் எம். வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளா் எம். கீதா முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை பெண்கள் உயா்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை டி. லீலாவதி, குட் ஷெப்பா்ட் பள்ளி தாளாளா் ஜி. சாலமன் தேவராஜ், பேராசிரியை ஆா். மல்லிகா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேசப் பக்தி பாடல்கள், பக்தி பாடல்கள், கா்நாடக இசை, ஆங்கில பாடல்கள் ஆகிய தங்களுக்கான பாடத் திட்டத்தோடு தொடா்புடைய பாடல்களை மாணவா்கள் பாடினா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.