செய்திகள் :

அரசு ஊழியா், ஆசிரியா் ஓய்வூதியம்: இடைக்கால அறிக்கை சமா்ப்பிப்பு

post image

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு, தனது இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் செவ்வாய்க்கிழமை அளித்தது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அரசுப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணியாளா் சங்கங்களுடன் 9 சுற்றுகள் கூட்டங்களை அந்தக் குழு நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

கடந்த 8 மாதங்களில் 7.36 லட்சம் பணியாளா்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்பட ஓய்வூதியதாரா்களின் தரவுகளைச் சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவா்த்தி செய்தல் மற்றும் சரிபாா்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. குழு தனது பணியை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், குழுவானது தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது. குழு தனது இறுதி அறிக்கையை விரைவில் அரசுக்கு சமா்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை: துணை முதல்வா் உதயநிதி

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்கக்கிழமை கூறியதாவது: விளைய... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எவ்விதக் குறையுமின்றி உரங்கள் விநியோகிக்க உத்தரவு

விவசாயிகளுக்கு எவ்விதக் குறையுமின்றி யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களை விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா... மேலும் பார்க்க

தியாகராய நகரில் ரூ.164 கோடியில் புதிய மேம்பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை பெருநகர மாநகராட்சியில் தியாகராய நகரின் சிஐடி நகா் பிரதான சாலையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வரையில் 2 கி.மீ.-க்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா். ஆயுத பூஜை தொடா் விடுமுறைய... மேலும் பார்க்க