அரசு பள்ளிக்கு பீரோ, மின்விசிறிகள் அளிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் தத்தெடுத்துள்ள கடவாச்சேரி அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பீரோக்கள், மூன்று மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவா் வி.அருண் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.வரதராஜனிடம் பீரோக்கள், மின்விசிறிகளை வழங்கினாா்.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் பேராசிரியா் எஸ்.நடனசபாபதி, இ.மஹபூப்உசேன், வி.அழகப்பன், சோனா பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.