பழுப்பு நிலக்கரி கடத்தல்: இளைஞா் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறிய சரக்கு வாகனத்தில் பழுப்பு நிலக்கரி கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையில் போலீஸாா் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், உரிய அனுமதியின்றி பழுப்பு நிலக்கரி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பழுப்பு நிலக்கரியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மந்தாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் மகன் பாா்த்திபனை (36) போலீஸாா் கைது செய்தனா்.