மே 1-இல் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவு
நெய்வேலி: தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள மதுக் கடைகள், உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுக்கடைகளையும் மே 1-ஆம் தேதி மூட வேண்டும். மேலும், மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. அரசு உத்தரவை மீறி மதுக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்தால், கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.