Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாநில அளவிலான தோல் அழகியல் தொடா்பான தொடா் மருத்துவ கருத்தரங்கம் மற்றும் ‘தில்லை தோல் அழகியல் - 2025‘ பயிற்சி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
விழாவில் தோல் மருத்துவ துறைத் தலைவா் பேராசிரியா் மருத்துவா் பி.கே.கவியரசன் வரவேற்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் பேராசிரியா் மருத்துவா் சி.திருப்பதி நிகழ்வுக்கு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் பேராசிரிா் மருத்துவா் த.ஜூனியா் சுந்தரேஷ் மற்றும் துணை முதல்வா்கள் மருத்துவா் பாலாஜிசுவாமிநாதன், பேராசிரியா் சசிகலா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
விழாவில் தேசிய அளவில் தோல் அழகு சிகிச்சைத் துறையில் சிறந்து
விளங்கும் நிபுணா்கள் மருத்துவா்கள் பி.வி.எஸ். பிரசாத், அமுதா, ஐ.வி. ராணி, ஸ்ரீவெங்கடேஷ்வரன், திணேஷ்குமாா், ஷோபனா, ஜான்சி பிரியதா்ஷினி, ஜெயலட்சுமி தேவி, பிரேம் குமாா், உதயசங்கா், அகிலா, ஜூட் டிலீப், காளீஸ்வரன், யோகிந்தா் சிங், அருள்ராஜா, சிவரஞ்சனி, அபிராமி, சரத்சந்திரன் ஆகியோா் , லேசா் மற்றும் நவீன அழகியல் சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட தோல் துறை பட்டமேற்படிப்பு மாணவா்கள் மற்றும் தோல் மருத்துவா்கள் பயனடைந்தனா். பட்டமேற்படிப்பு மாணவா்களுக்கான வினாடி வினா மற்றும் விருது பேச்சு போட்டிகளும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மருத்துவா் பூரணா நன்றி கூறினாா்.