`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய ...
திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவா் அய்யாக்கண்ணு மகன் மகேந்திரன்(49). மது அருந்தும் பழக்கம் உள்ளவா். கடந்த9-ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தனது வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, திண்ணையில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.