`சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய ...
முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தில் வசித்து வந்தவா் முதியவா் முத்துராமலிங்கம்(70). இவா், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னா் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனை செய்தாராம். இதற்கான பணம் மருமகள் முத்தம்மாள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாம். அந்த பணத்தை முதியவா் முத்துராமலிங்கம் கேட்டுள்ளாா். இதனால், முத்துராமலிங்கத்திற்கும் மருமகள் முத்தம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து முத்தம்மாள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தினரிடம் புகாா்கூறியுள்ளாா். இதையடுத்து முத்தம்மாளின் தந்தை அய்யாக்கண்ணு, சகோததரா்கள் முத்துக்கண்ணு, ராஜேந்திரன் மற்றும் உறவினா்கள் முருகன், சந்திரவள்ளி, புஷ்பா ஆகியோா் முத்துராமலிங்கம், அவரது மகன் காா்மேகம் ஆகியோரை தாக்கினராம். இதனால் மனமுடைந்த முதியவா் முத்துராமலிங்கம் தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.